தேங்காய் எண்ணெய் வைத்து எப்படி முகத்தை பளபளக்க செய்யலாம் தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆவல் இருக்கும். ஒரு சிலர் இயற்கையான முறையை பயன்படுத்தி தங்களது சருமத்தை பராமரித்து வருவார்கள்.
அதிலும் சிலர் செயற்கை முறையில் அதாவது சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள நினைப்பார்கள்.
ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் சருமமானது பாதிப்படைய மட்டுமே செய்யும். ஒவ்வாமை போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
ஆகவே இயற்கையான முறையில் மட்டுமே எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும பளபளப்புக்கு தேன்
சுத்தமான தேனை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
அடுத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த கலவையை பூசி சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து, நீரில் கழுவிக்கொள்ளவும்.
கற்றாழை, மஞ்சள் மற்றும் கடலை மாவு
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலைமாவு, ஒரு தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, பேஸ்ட் தயார் செய்துக்கொள்ளவும்.
இந்த பேஸ்டை 15 முதல் 20 நிமிடங்களுக்கு முகத்தில் பூசி ஊற விடவும்.
அடுத்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சூடாக்கி, முகத்தில் பூசி மசாஜ் செய்துக்கொள்ளவும். பின்னர் காலை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |