சருமத்தை பளபளக்க செய்யும் சிவரிக்கீரை ஜூஸ்...!
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
இதற்காக என்ன தான் செய்தாலும் சருமத்தை நினைப்பதை போன்று மாற்ற முடியாது. எனவே அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த சிவரிக்கீரை இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜூஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சிவரிக்கீரை ஜூஸ்
கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல செலரி சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக நீர்ச்சத்தானது காணப்படுகிறது.
ஊட்டச்சத்து
வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த காய்கறியாக செலரி இருக்கிறது.
குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
-
சருமம் பளபளக்கும்.
-
செரிமானம் சீராக இருக்கும்.
- இதய ஆரோக்கியம் மேம்படும்.
-
கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையங்கள் குறையும்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
-
இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலும் இந்த கீரையின் சாற்றை தினமும் குடித்து வர முகமும் பளபளப்பாக இருக்கும். உடலில் உள்ள பல பிரச்சினைகளும் குணமடையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |