முடி அடர்த்தியாக வளர...! பிரபல நடிகையின் டிப்ஸ்
சீரியல் நடிகை ஹிமா பிந்து நமது ஐபிசி மங்கை சேனலில் பேசிய ஸ்கின் மற்றும் ஹேர் டிப்ஸை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஹேர் டிப்ஸ்
முடியை பொறுத்த வரைக்கும் அம்மாவுக்கு தெரிஞ்சவங்க எல்லா பொருளையும் கலந்து ஒரு எண்ணெய் தயாரிப்பாங்க. அதை தான் இரவில் நேரம் கிடைக்கும் போது மிதமாக சூடாக்கி தேய்ப்பேன்.
பின்பு, மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து தலைக்கு குளிப்பேன். இதை அடிக்கடி செய்தாலே போதும். முடி அழகாக மிருதுவாக மாறிவிடும். பியூட்டி பார்லர் மட்டும் போய்டாதீங்க.
முக்கியமா ஹேர் கலரிங் மட்டுமே பண்ணிடாதீங்க. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹேர் கலரிங் செய்து முடி ரொம்ப டேமேஜ் ஆகிவிட்டது. சாதாரனை எண்ணெய் நல்லா தேய்த்தாலே போதும். அதை தான் நான் செய்கிறேன்.
நெய் வைத்தால் இன்னும் முடி மிருதுவாக மாறும். எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்தால் பொடுகு தொல்லை குறையும்.
முடி வளருவதற்கு கேரட் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பேன். கருப்பாக வளருவதற்கு கறிவேப்பிலை ஜூஸ் அதிகமா சாப்பிட்டேன்.
ஸ்கின் டிப்ஸ்
முகத்தில் பரு வந்தால் சந்தனம் கொஞ்சம் வைப்பேன். அதற்கு பெஸ்ட் ரெமெடி ஐஸ் கியூப் தான். அதை வைத்தாலே போதும். இரண்டு நாள்களில் அதுவே போய்விடும்.
தயிர் மற்றும் முல்தானி மெட்டி, தயிர் மற்றும் ரைஸ் வாட்டர், பன்னீர் தான் முகத்திற்கு பயன்படுத்துவேன். கருவளையம் வந்தால் வெள்ளரிக்காய் வைப்பேன். பார்லர் போனால் எல்லாம் கெமிக்கல் தான். நான் பெரிதாக பேசியல் செய்ய மாட்டேன்.
டயட்டிற்கு காலையில் 2-3 முட்டை சாப்பிடுவேன். அம்மா ஜூஸ் கொடுப்பாங்க அல்லது இட்லி சாப்பிட்டு போவேன். இரவில் பாதாம், கருப்பு திராட்சை ஊறவைத்து காலையில் சாப்பிடுவேன். மதியம் புரொடக்ஷன் சாப்பாடு தான் என்று 'இதயத்தை திருடாதே' தொலைகாட்சி தொடரில் நடித்த ஹிமா பிந்து தனது லைஃப் ஸ்டைல் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |