சருமம் முதல் கூந்தல் வரை.., நன்மைகளை வாரி வழங்கும் Vitamin E Capsule
முக்கிய ஊட்டசத்தான வைட்டமின் ஈ உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியமானது.
மேலும் இந்த ஊட்டச்சத்தானது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
மேலும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களையும் பாதுகாக்க உதவுகிறது.
அந்தவகையில் மருந்தகத்தில் கிடைக்கும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சருமத்திற்கு மிகவும் நன்மைகளை அளிக்க கூடியது. சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பிரபல மருத்துவரான பிஸ்வஜித் சர்க்கார் கூறுகையில், சருமத்தை பராமரிக்க பயன்படுத்தும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கேப்ஸ்யூல் முகப்பருக்கள், தழும்புகள், ரேஷஸ் போன்ற சில பொதுவான சரும பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் முகப்பருக்களை பின் தோன்றும் வடுக்களையும் மறையச்செய்கிறது.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.
இதைதவிர இது கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையங்களை போக்க உதவுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனைக்கு பயன்படுத்தும் எண்ணெயுடன் வைட்டமின் ஈ-யை கலந்து பயன்படுத்தலாம்.
குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் முடி உதிர்வு சிக்கலுக்கு வைட்டமின் ஈ பெரிதும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |