வயதானாலும் முகத்தில் சுருக்கம் வரவே கூடாதுன்னு நினைக்கறவங்க இத ட்ரை பண்ணி பாருங்க!
முகத்தில் உள்ள சுருக்கத்தை இயற்கையான முறையில் நீக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் வெற்றி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
தனது முகத்திற்கு பவுடர் போட்டு, செயற்கையாக என்னென்ன வழிகளில் முகத்தசைகளை பளபளப்பாக வைத்துக்கொள்ள முயல்கின்றார்கள்.
ஆனால் எவ்வளவு செயற்கையாக ரசாயன பொடிகள், வாசனை திரவியங்களை பூசினாலும் இயற்கையாக முகம் எப்போதும் வெளிவர தான் செய்யும்.
ஆகவே இளம் வயத்தில் இருக்கும் முதுமை தோற்றத்தை எப்படி சரி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தோலில் ஏற்படும் சுருக்கம்
பெரும்பாலானவர்களுக்கு 40 முதல் 50 வயதிற்குள் தோல் ஈரப்பதம் மற்றும் தடிமன் இழந்து சுருக்கங்கள் உருவாகும். நீங்கள் வயதாகும்போது, உங்கள் தோல் இயற்கையாகவே வலுவிழந்து, குறைந்த நீரேற்றம் ஆனால் இளம் வயதில் சுருக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருகின்றது.
இளம் வயதில் சுருக்கம் ஏற்பட காரணம்
-
ஒளியின் வெளிப்பாடு
- புகைபிடித்தல்
- கண் சிமிட்டுதல்
-
புன்னகைத்தல்
- முகம் சுளித்தல்
- அதிகப்படியான அழகுசாதனப் பொருட்கள்
- மாசுபாடு
-
மன அழுத்தம்
- தூக்கமின்மை
- மோசமான உணவு
- மரபியல்
இதில் இருந்து விடுப்படுவதற்காக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஒரு தீர்வை ஆராய்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயற்கையான முறையில் எப்படி தடுக்கலாம் என கண்டுப்பிடித்துள்ளார்கள். அது பற்றி பார்க்கலாம்.
கடல் பாசி
தெற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் மட்டுமே காணப்படும் பழுப்பு கடல் பாசியில் உள்ள சில இயற்கை சத்துக்கள் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தும் என கண்டுப்பிடித்துள்ளார்கள்.
அழகு சாதன பொருட்கள்
கடலிலிருந்து கடல்பாசிகள் எடுக்கப்பட்டு, அதில் உள்ள தூசிகள் மற்றும் குப்பைகள் நீக்கப்பட்டு, பொடிசெய்ய வேண்டும்.
செயற்கை வேதிப்பொருட்களை விட பாசிகளே சருமத்தை பாதுக்காக்க சிறந்த ஒரு பொருளாகும்.
ஆகவே இந்த பாசிகளில் இருந்து இனி இயற்கையான அழகு சாதனை பொருட்களை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவி்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |