Skoda Kylaq டெஸ்ட் டிரைவ், டெலிவரி விவரங்கள் வெளியீடு
ஸ்கோடா (Skoda) நிறுவனம் இதன் முதல் சப்-4 மீட்டர் SUV-யான Skoda Kylaq உற்பத்தியை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.
இந்த Kylaq, இந்தியாவில் புனே அருகே உள்ள சாகன் வோல்க்ஸ்வாகன்-ஸ்கோடா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
விரைவில் இது விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும். கைலாக்கின் எதிர்பார்ப்பு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, ஸ்கோடா தனது உற்பத்தி திறனை 30% அதிகரித்து, ஆண்டுக்கு 2.55 லட்சம் கார்கள் தயாரிக்கும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது.
டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரி தகவல்கள்
கைலாக்கின் டெஸ்ட் டிரைவ் 2025 ஜனவரியில் தொடங்குகிறது. பிப்ரவரி 2025 முதல் விநியோகங்கள் நடைபெறும்.
ஒன்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், 10 நாட்களில் 10,000 முன்பதிவுகளை ஸ்கோடா பெற்றுள்ளது.
கைலாக், இந்திய சந்தைக்கு வடிவமைக்கப்பட்ட MQB Ao IN தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
1 லிட்டர், 3 சிலிண்டர் TSI என்ஜின் (115 Bhp, 178 Nm) கொண்ட இதன் ஆரம்ப விலை ரூ.7.89 லட்சம் மற்றும் அதிகபட்ச விலை ரூ.14.4 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Skoda Kylaq