புதிய electric SUV காரை அறிமுகப்படுத்தும் Skoda., அதன் பெயர் என்ன தெரியுமா?
Skoda-வின் புதிய electric SUV கார் எல்ரோக் (Elroq) என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
Volkswagen-ன் EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த Elroq, வரவிருக்கும் Hyundai Creta EVக்கு போட்டியாக டிசம்பரில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இந்த all-electric compact SUV காரண Elroq-ன் டீசரை Skoda Auto வெளியிட்டுள்ளது.
இந்த SUV ஸ்கோடாவின் புதிய நவீன வடிவமைப்பு மொழியைக் கொண்டிருக்கும் முதல் தயாரிப்பு மாடலாக இருக்கும்.
இந்நிறுவனத்தின் வரவிருக்கும் 6 மின்சார வாகனங்களின் முதல் மாடல் இதுவாகும், இது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB மாடுலர் EV இயங்குதளத்தில் கட்டப்படும் மூன்றாவது மொடலாகும், இது Enyaq மற்றும் Enyaq Coupe அடிப்படையாக கொண்டது.
முழுமையாக LED lighting setup-உடன் வரும் Skoda Elroc
டீசரில், ஸ்கோடா பேட்ஜிங் மற்றும் upper lighting கூறுகள் தெரியும். ஸ்கோடாவின் கூற்றுப்படி, கார் split headlamp வடிவமைப்பைப் பெறும், இது போனட் லைனில் broken LED DRL strip மற்றும் கீழே grill மீது நீட்டிக்கப்படும் lighting கூறுகளைக் கொண்டிருக்கலாம்.
மேலும் இந்த எஸ்யூவியில் பாரிய சக்கரங்கள் மற்றும் matrix LED headlamps இருக்கும் என்பதையும் ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |