பாரசூட்டை திறக்காமல் 10,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பெண் - விசாரணையில் வெளியான காரணம்
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள கெர்பில்லியைச் சேர்ந்த 32 வயதான Jade Damarell என்ற பெண், நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஸ்கை டைவிங்கில் ஆர்வம் கொண்டுள்ள இவர், 400 முறைக்கு மேல் பாரசூட் மூலம் வானில் இருந்து குதித்துள்ளார்.
10,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு
டர்ஹாமில் உள்ள ஷாட்டன் கோலியரியில் 10,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த இவர், தரையில் மோதியதும் உயிரிழந்துள்ளார்.
முதலில், பாராசூட் செயலிழந்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாகவே டமரெல் உயிரிழந்திருப்பார் என காவல்துறையினர் கருதினர்.
காதல் முறிவு
ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பார்சூட்டில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை எனவும், அவரது காதலன் காதலை முறித்து கொண்டதால் ஏற்பட்ட சோகத்தில், வேண்டுமென்றே பாரசூட்டை திறக்காமல் உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.
டமரெல், 26 வயதான Ben Goodfellow என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார். இருவரும் கடந்த 8 மாதங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
காதலரும் ஸ்கை டைவர் என்பதால், இருவரும் பல முறை ஒன்றாக ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் Ben, டமரெலுடனான காதலை முறித்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த டமரெல் மறுநாள் ஸ்கை டைவிங்கின் போது உயிரை மாய்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |