விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய ஸ்கைடைவர்: அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்ட வீடியோ
வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது.
தவறுதலாக திறக்கப்பட்ட பாராசூட்
கடந்த செப்டம்பர் மாதம் கெய்ர்ன்ஸ்(Cairns) தெற்கே சுமார் 15,000 அடி உயரத்தில் பார்மேஷன் ஜம்பிற்காக(Farmation Jump) 16 பேர் கொண்ட குழு தயாரான போது யாரும் எதிர்பாராத சம்பவம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

முதல் ஸ்கைடைவர் குதிப்பதற்காக வெளியேறும் இடத்தை நெருங்கிய போது, ஸ்கைடைவரின் தற்காப்பு பாராசூட் விமானத்தின் கைப்பிடி சிக்கிய எதிர்பாராத விதமாக திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த நொடியே நிலைகுலைந்த ஸ்கைடைவர் விமானத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டார்.
பாராசூட் விமானத்தின் வால் பகுதியில் சிக்கிக் கொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்த குழப்பமான நிலையில் விமானத்தில் இருந்து குதிக்க தயாராக இருந்த கேமரா ஆப்பரேட்டரும் நிலைதடுமாறி விமானத்தில் இருந்து கட்டற்ற வீழ்ச்சிக்கு ஆளானார்.
துரிதமாக செயல்பட்ட ஸ்கைடைவர்
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிக் கொண்ட ஸ்கைடைவர் தனது கொக்கிக் கத்தியை பயன்படுத்தி விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட தற்காப்பு பாராசூட்டின் கயிற்றை அறுத்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
பின்னர் அவரது பிரதான பாராசூட்டை பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கியுள்ளார்.
அதே சமயம் விமானத்தின் வால் பகுதி சேதமடைந்ததால், விமான அவசர உதவிக்காக “மேடே”(mayday) அழைப்பை விடுத்தார்.
இருப்பினும், அந்த விமானியே விமானத்தை வெற்றிகரமாக தரையில் இறக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவுஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு பணியகம் அதிகாரிகள் இந்த காணொளிக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |