பிரான்ஸில் விபத்துக்குள்ளான ஸ்கை டைவிங் விமானம்: 5 நர்ஸ்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
பிரான்சில் ஸ்கை டைவிங் செய்ய பறந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஸ்கை டைவிங் விமானம்
பிரான்ஸின் நான்சி நகருக்கு அருகிலுள்ள டாம்ப்லெய்ன் நகரில் ஸ்கை டைவிங் செய்ய சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 5 ஸ்கை டைவிங் பிரியர்கள், வழிகாட்ட வந்த பயிற்றுநர்கள் 5 பேர் மற்றும் விமானி என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஸ்கை டைவிங் செய்த 5 பேரும் முதல் முறையாக ஸ்கை டைவிங் செய்த தொழில்முறை நர்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் நிறைந்த டாம்ப்லெய்ன் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் சாலை அருகே அமைந்துள்ள புல்வெளி பரப்பில் இந்த விமானமானது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
At least 11 dead in civilian plane crash in eastern France. pic.twitter.com/sLRSJfF2yW
— Vani Mehrotra (@vani_mehrotra) June 28, 2026
விமானம் ஸ்கை டைவிங் கிளப்பிற்கு சொந்தமானது என்றும், அது வழக்கமாக ஸ்கை டைவிங் செய்வதற்கு பயன்படுத்த கூடிய பிலாடஸ் வகையை சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் விமானம் செங்குத்தாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |