சூரிய சக்தியால் இயங்கும் விமானம் - 3 மாதங்களுக்கு தரையிறங்காமல் பறக்கும்

United States of America Flight
By Karthikraja Jul 24, 2025 12:58 PM GMT
Report

பெரும்பாலான விமானங்கள் எரிபொருள் மூலமாகவே இயங்குகின்றன. இதன் காரணமாக சில மணி நேரங்கள் பறந்து பின்னர், எரிபொருள் தீரும் தருவாயில், எரிபொருள் நிரப்ப தரை இறங்க வேண்டும்.

சில போர் விமானங்களில், வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது. இதன் மூலம், சில நாட்களுக்கு தரையிறங்காமல் பறக்க முடியும்.

சூரிய சக்தியால் இயங்கும் விமானம்

இந்நிலையில், சூரிய ஒளியால் இயங்க கூடிய விமானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நாட்களுக்கு தரையிறங்காமல், இந்த கண்காணிப்பு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது.  

skydweller solar aircraft

அமெரிக்காவை சேர்ந்த ஸ்கைட்வெல்லர் (SkyDweller) என்ற நிறுவனம், இந்த விமானத்தை உருவாக்கியுள்ளது.

270 ச.மீ. பரப்பளவுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளில் 17,000 சோலார்பேனல்கள் நிறுவப்பட்டு, அதன் மூலம் தேவையான சூரிய ஒளி மின் சக்தியாக மாற்றப்படுகிறது. 

12 நாளில் பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் NISAR செயற்கைக்கோள்., NASA-ISRO கூட்டு முயற்சி

12 நாளில் பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் NISAR செயற்கைக்கோள்., NASA-ISRO கூட்டு முயற்சி

மேகமூட்டமான வானிலையில் கூட, இதன் சூரிய மின்கலங்கள் 100kW வரை மின்சாரத்தை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த மின்சாரம் 635 கிலோ  எடையுள்ள பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கூட பறப்பில் ஈடுபட உதவுகிறது. 

skydweller solar aircraft

பகலில் இந்த விமானம் 24,600 மற்றும் 34,400 அடி உயரத்திலும், இரவில் மின்சாரத்தைச் சேமிப்பதற்காக 4,900 முதல் 9,800 அடி உயரத்திலும் பறக்கிறது.

பாதுகாப்பு அமைப்புகள்

இந்த விமானத்தின் இறக்கைகள் போயிங் விமானத்தை விட அதிக நீளத்தை கொண்டிருந்தாலும், கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய ஜம்போ ஜெட் விமானத்தை விட 160 மடங்கு குறைவான எடை கொண்டது. 

skydweller solar aircraft

இதன் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் தானியங்கி காற்று-சுமை தணிப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், விமானம் கொந்தளிப்பால் ஏற்படும் காற்றியக்க சுமைகளைக் குறைக்க முடியும். 

மேலும், 90 நாட்கள் வரை நம்பகத்தன்மையுடன் பறப்பில் ஈடுபட 4 மடங்கு அதிகப்படியான விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அதிநவீன வாகன மேலாண்மை அமைப்பு (VMS) உள்ளது. இந்த VMS அமைப்பு, கணினியில் உள்ள எந்தவொரு சிக்கலையும் தானாகவே கண்டறிந்து சரிசெய்து, விமானம் தொடர்ந்து பறக்க உதவும். 

skydweller solar aircraft

விமானத்தில் உள்ள அமைப்புகளில் ஒன்று செயலிழந்தால், காப்பு அமைப்பு (backup system) விமானம் தொடர்ந்து பறக்க உதவும்.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US