157 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி! நிசங்கா அரைசதம்..மொத்தமாக சரித்த மூவர் கூட்டணி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடக்கத்தில் தடுமாற்றம்
ஹமில்டனில் இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. ஹென்ரியின் மிரட்டலான பந்துவீச்சில் நுவனிந்து பெர்னாண்டோ(2), குசால் மெண்டிஸ் (0) அடுத்தடுத்து நடையை கட்டினர்.
பின்னர் வந்த மேத்யூஸ் ஓட்டங்கள் எடுக்காமலும், அசலங்கா 9 ஓட்டங்களிலும் வெளியேறினர். எனினும் தொடக்க வீரர் பதும் நிசங்கா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே நேரம் அவர் பவுண்டரிகளை விரட்டவும் தவறவில்லை.
Pathum Nissanka top scores with the only fifty of Sri Lanka's innings. #NZvSL pic.twitter.com/uMmvmghcTZ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 31, 2023
நிசங்கா அரைசதம்
இதற்கிடையில் தனஞ்செய டி சில்வா 13 ஓட்டங்களில் மிட்செல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் விளாசிய நிசங்கா, 64 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
ஓரளவு போராடிய கேப்டன் ஷனகா 31 ஓட்டங்களும், கருணரத்னே 24 ஓட்டங்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால், இலங்கை அணி 41.3 ஓவரில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி, ஷிப்லே மற்றும் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Strong with the ball! ?
— BLACKCAPS (@BLACKCAPS) March 31, 2023
Matt Henry (3-14), Henry Shipley (3-32) and Daryl Mitchell (3-32) leading a spirited display in the field. Follow the chase LIVE in NZ with @sparknzsport or Rova. LIVE scoring https://t.co/xSgTCHRXok ? #NZvSL #CricketNation pic.twitter.com/rFpjyR8dLC