கடைசி கட்டத்தில் அடித்து நொறுக்கிய அசலங்கா! இலங்கை அணி 157 ஓட்டங்கள் குவிப்பு
158 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி களமிறங்கி ஆடி வருகிறது
தொடக்க வீரர் டேவிட் வார்னர் 11 ஓட்டங்களில் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பெர்த்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 5 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, பதும் நிசங்காவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
AFP
இந்த கூட்டணி 69 ஓட்டங்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்தபோது டி சில்வா 26 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து நங்கூரம்போல் நின்று ஆடிய நிசங்கா 40 (45) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் அதிரடியில் மிரட்டிய அசலங்கா 25 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், அகர் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.