இலங்கை அணிக்கு எதிராக பந்துவீசிய 11 வீரர்கள்! ருத்ர தாண்டவம் ஆடிய குசால் மெண்டிஸ்.. ஹசரங்காவின் மிரட்டல் ஆட்டம்
இந்தப் போட்டியில் ஹசரங்கா மற்றும் ஷனகா இணை 55 ஓட்டங்கள் குவித்தது
ஜிம்பாப்வேயின் பிராட் ஈவன்ஸ் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 188 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மெல்போர்னில் நடந்து வருகிறது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 21 ஓட்டங்களிலும், தனஞ்சய டி சில்வா, குணாதிலகா மற்றும் ராஜபக்சே தலா 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் ருத்ர தாண்டவம் ஆடிய குசால் மெண்டிஸ் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். அதேபோல் ஹசரங்கா 14 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசினார்.
Twitter (@OfficialSLC)
இலங்கை அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணியின் 11 வீரர்கள் பந்துவீசினர். மாதேவீரெ மற்றும் ஸும்பா தலா ஒரு ஓவர் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Innings break: SL 188/5
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 11, 2022
Scorecard: https://t.co/zn8yRJW08C#RoaringForGlory pic.twitter.com/CsAOUPTnSp