இலங்கை அணி ஆல்அவுட்: தனியொருவனாய் மிரட்டிய நிரோசன் திக்வெல்ல
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
காலேவில் இன்று இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்கள் நிசங்கா 23 ஓட்டங்களும், கருணாரத்னே 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
குசால் மெண்டிஸ், சண்டிமல், தனஞ்சய டி சில்வா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ஓட்டங்கள் எடுத்து லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
ஏனைய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், விக்கெட் கீப்பர் நிரோசன் திக்வெல்ல நங்கூரம்போல் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
A fine counter-attacking knock by Niroshan Dickwella! ?#SLvAUS pic.twitter.com/cUFmDvalo4
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 29, 2022
இலங்கை அணியின் 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்த அவர் 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்தார். நாதன் லயன் மற்றும் ஸ்வெப்சன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.