உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கைக்கு பயத்தை காட்டிய ஒற்றை வீரர்
வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 264 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நிசங்கா அரைசதம்
கவுகாத்தியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியது. குசால் பெரேரா 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிடையர் ஹர்டில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
மஹெடி ஹசன் மிரட்டல் பந்துவீச்சு
பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா (2), அரைசதம் விளாசிய நிசங்கா (68) மற்றும் அசலங்கா (18) ஆகியோர் மஹெடி ஹசன் சுழலில் வீழ்ந்தனர்.
எனினும் தனஞ்செய டி சில்வா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 79 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 49.1 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மஹெடி ஹசன் 3 விக்கெட்டுகளும், சகிப், சோரிபுல், மெஹெடி மற்றும் நசும் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Sri Lanka sets a target of 264 runs in the 1st warm-up game. #SLvsBAN #LankanLions #CWC23 pic.twitter.com/Q3KhObmTIG
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 29, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |