வெளிநாட்டு மண்ணில் அதிரடியில் மிரட்டிய இலங்கை! முதல் நாளில் 305 ஓட்டங்கள் குவிப்பு
நியூசிலாந்து எதிரான டெஸ்டில் இலங்கை அணி முதல் நாளில் 305 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை அதிரடி துடுப்பாட்டம்
கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லே ஓவல் மைதானத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. ஒஷாட பெர்னாண்டோ 13 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், கேப்டன் திமுத் கருணாரத்னே மற்றும் குசால் மெண்டிஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
குசால் அதிரடியாக பவுண்டரிகளை விரட்டினார். மறுமுனையில் திமுத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது கூட்டணி 137 ஓட்டங்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 87 (83) ஓட்டங்களில் சௌதீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 16 பவுண்டரிகள் அடங்கும்.
Kusal Mendis departs after a terrific innings! #NZvSL pic.twitter.com/nYIRfimx5R
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 9, 2023
அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே 50 ஓட்டங்கள் எடுத்திருந்த திமுத் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமல் 39 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Dimuth Karunaratne departs after a fine fifty!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 9, 2023
Match Centre: https://t.co/FkzUTbHr4y#NZvSL pic.twitter.com/8XOSvALHu9
75 ஓவர்களில் முதல்நாள் ஆட்டம் நிறுத்தம்
அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 305 ஓட்டங்களாக இருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக, 75 ஓவர்கள் வீசப்பட்ட நிலையிலேயே முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
தனஞ்செய டி சில்வா 39 ஓட்டங்களுடனும், கசுன் ரஜிதா 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளும், ஹென்றி 2 விக்கெட்டுகளும், பிரேஸ்வெல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Bad light forces early stumps on day 01. Sri Lanka on 305/6.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 9, 2023
Match Centre: https://t.co/FkzUTbHr4y#NZvSL
?: @photosportnz pic.twitter.com/8HmskjnE5H
@BLACKCAPS