அவுஸ்திரேலியாவை அடித்து துவைத்த இலங்கை! மிரட்டலான ஆட்டம்
இலங்கை ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தியது.
இலங்கை 'ஏ' - அவுஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது.
முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 312 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 110 ஓட்டங்களும், ஆரோன் ஹார்டி 58 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Photo Credit: Twitter(@OfficialSLC)
பின்னர் ஆடிய இலங்கை அணி 48.5 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிக்வெல்லா 83 ஓட்டங்களும், அஷென் பண்டாரா 73 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
Photo Credit: Twitter(@OfficialSLC)
இதன்மூலம் இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமனில் முடித்தது.
Photo Credit: Twitter(@OfficialSLC)
Photo Credit: Twitter(@OfficialSLC)