இலங்கை வீரர் முதல் சர்வதேச சதம்! நங்கூர ஆட்டம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சரித் அசலங்கா முதல் சதம் அடித்து மிரட்டினார்.
கொழும்பில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கா சதம் விளாசியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடிய அசலங்கா, 99 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
தனது 15வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ள அசலங்கா 635 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 8 சிக்ஸர், 51 பவுண்டரிகளை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
? Maiden International century for Charith Asalanka? #SLvAUS pic.twitter.com/02ABe4wn1v
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 21, 2022