இது இலங்கைக்கு சாதகமான ஆடுகளம்: உதவி பயிற்சியாளர்
சிட்னியில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை அணிநியூசிலாந்தை எதிர்கொள்கிறது
சிட்னி போன்ற ஆடுகளத்தில் நாங்கள் வித்தியாசமான திட்டத்துடன் செல்ல வேண்டும் - இலங்கை உதவி பயிற்சியாளர்
நவீத் நவாஸ் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வித்தியாசமான திட்டத்துடன் செல்ல வேண்டும் என இலங்கை அணியின் உதவி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளின் அதிக ரன்ரேட் வைத்துள்ள நியூசிலாந்து முதலிடத்திலும், 2 புள்ளிகளை வைத்து இலங்கை அணி 5வது இடத்திலும் உள்ளன.
Getty
இந்த நிலையில் இலங்கை அணியின் உதவி பயிற்சியாளர் நவீத் நவாஸ் இன்றைய மோதல் குறித்து கூறுகையில், 'இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் (சிட்னி) நாங்கள் வித்தியாசமான விளையாட்டுத் திட்டத்துடன் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக சிட்னி இலங்கைக்கு சாதமான இடமாக உள்ளது.
வேகமான அவுட் பீல்டுடன் நல்ல துடுப்பாட்ட விக்கெட் அமையும்போது நிச்சயமாக ஓட்டங்கள் எடுக்க முடியும். காயம் என்பது நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, மேலும் அது புதிய வீரர் ஒருவர் வந்து விளையாடும் வாய்ப்பாக நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் அணி வீரர்கள் மிகக் குறைந்த ஓவர்களே கடைசியில் இருக்கும்போது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.