அதிர்ந்த மைதானம்..அவுஸ்திரேலியாவை பந்தாடிய இலங்கை! ஆட்டநாயகனான கருணரத்னே
பல்லேகேலேவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 14 ஓட்டங்களிலும், குணாதிலகா 18 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
பின்னர் கைகோர்த்த தனஞ்சய டி சில்வா-குசால் மெண்டிஸ் இணை, ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிசும் (36) மேக்ஸ்வெல் பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷனகா 34 ஓட்டங்களும், கருணரத்னே 18 ஓட்டங்களும், துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
Photo Credit: AP Photo
இலங்கை அணியின் ஸ்கோர் 220/9 (47.4) ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால், முதல் இன்னிங்ஸ் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டேவிட் வர்னரும், கேப்டன் பின்சும் களமிறங்கினர். பின்சை 14 ஓட்டங்களில் தனஞ்சய டி சில்வா வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், வார்னருடன் சேர்ந்து ஓரளவு ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 62 ஆக இருந்தபோது, தனஞ்சய டி சில்வா ஓவரில் வார்னர் (37) போல்டானார். பின்னர் கருணரத்னே ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்த ஸ்மித் ஆட்டமிழந்தார்.
Australia need 35 runs in 42 balls, Sri Lanka need to 2 wickets!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 16, 2022
LIVE: https://t.co/Z7ybrIeKNm#SLvAUS pic.twitter.com/wBEc0Ub16k
அடுத்து வந்த ட்ராவிஸ் ஹெட் (23), லபுசேக்னே (18) ஆகியோரை இளம் வீரர் துனித் வெல்லாலகே வெளியேற்றினார். மேக்ஸ்வெல் மட்டும் 30 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால், அவுஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
📸 Catches win Matches!#SLvAUS pic.twitter.com/LXg1QKkVQA
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 16, 2022
இதன்மூலம் இலங்கை அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் கருணரத்னே 3 விக்கெட்டுகளையும், சமீரா, டி சில்வா மற்றும் துனித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கருணாரத்னே 3 விக்கெட்டுகளுடன், 18 ஓட்டங்கள் எடுத்த கருணரத்னே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி கொழும்பில் 19ஆம் திகதி நடக்கிறது.