அவுஸ்திரேலியாவை சுக்கு நூறாக்கிய இலங்கை! மிரட்டலாக முதல் சதம் அடித்த வீரர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நேற்று இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 70 ஓட்டங்களும், கேப்டன் பின்ச் 62 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் வாண்டர்சே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் டிக்வெல்ல 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடந்து நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இந்த கூட்டணி 213 ஓட்டங்கள் குவித்தது. 85 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதற்கிடையில் பதும் நிசங்கா சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை விளாசினார்.
தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்கள் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 284 ஆக இருந்தபோது நிசங்கா 137 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகள் விளாசியிருந்தார்.
இறுதியில் இலங்கை அணி 48.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பு 292 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் ஜேய் ரிச்சர்ட்ஸன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Pathum Nissanka (137) and Kusal Mendis (87) led the charge as Sri Lanka beat Australia by 6 wickets!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2022
Sri Lanka take a 2️⃣-1️⃣ series lead ?#SLvAUS pic.twitter.com/RP4bDjrtTr
சதமடித்த நிசங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.