பாகிஸ்தானை பழிதீர்த்த இலங்கை அணி! 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
காலேவில் நடந்த பாகிஸ்தானுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 360 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி நாளான இன்று தனது ஆட்டத்தினை தொடங்கிய பாகிஸ்தானுக்கு, இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் அதிர்ச்சி அளித்தார். 49 ஓட்டங்களில் இருந்த இமாம் உல் ஹக்கை அவர் ஆட்டமிழக்க செய்தார்.
அதன் பின்னர் பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி 79 ஓட்டங்கள் சேர்த்தது. இந்த கூட்டணியை பிரபத் ஜெயசூர்யா பிரித்தார். ரிஸ்வான் 37 ஓட்டங்களில் போல்டானார்.
PC: AFP/Getty Images
ஒருபுறம் பாபர் அசாம் போராட, மறுபுறம் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை பிரபத் ஜெயசூர்யா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் மாறி மாறி வீழ்த்தினர். அணியின் ஸ்கோர் 205 ஆக இருந்தபோது ஜெயசூர்யா பந்துவீச்சில் பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அவர் 81 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Twitter (@ICC)
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தானை அணி 261 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியின் தரப்பில் பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினர்.
PC: Twitter (@ICC)
இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. தனஞ்சய டி சில்வா ஆட்டநாயகன் விருதையும், பிரபத் ஜெயசூர்யா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
PC: Twitter (@ICC)
PC: AFP