இலங்கைக்கு உலகக்கோப்பையில் முதல் வெற்றி! தாறுமாறான பந்துவீச்சில் சுருண்ட அமீரகம்
இது உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் நெதர்லாந்தை 20ஆம் திகதி சந்திக்கிறது
இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கீலாங்கில் நடந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 152 ஓட்டங்கள் சேர்த்தது. தொடக்க வீரர் நிசங்கா 60 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய அமீரக அணி சமீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. அவரைத் தொடர்ந்து ஹசரங்கா தனது பங்கிற்கு சுழற்பந்து வீச்சில் மிரட்டினார்.
அவரது மாயாஜால சுழலில் விரிடிய அரவிந்த் 9 ஓட்டங்களிலும், ஆயன் கான் 19 ஓட்டங்களிலும், காஷிஃப் ஓட்டங்கள் எடுக்காமலும் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜுனைட் சித்திக் அதிரடி காட்டினார்.
அவர் 16 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்தார். அமீரக அணி 17.1 ஓவர்களில் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை தரப்பில் ஹசரங்கா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்டுகளையும், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
[
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இலங்கை வீரர் என்ற பெருமையை சமீரா பெற்றார்.
Sri Lanka come roaring back into the tournament with a comprehensive win over UAE ?
— ICC (@ICC) October 18, 2022
? Scorecard: https://t.co/fIoUF5AvN4
Head to our app and website to follow the #T20WorldCup action ? https://t.co/76r3b7l2N0 pic.twitter.com/vhS7KDIzvY