அதிரடி சதம், இரண்டு விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட்! பாகிஸ்தானை மிரட்டிய இலங்கை கேப்டன்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் அதிரடி சதம் விளாசினார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கான கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இலங்கை அணி துடுப்பாட்டத்தில் மிரட்டியது. கேப்டன் சமரி அதப்பட்டு அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 85 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய மாதவி 128 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. துடுப்பாட்டத்தில் மிரட்டிய இலங்கை கேப்டன் சமரி அதப்பட்டு பந்துவீச்சிலும் மிரட்டினார். பாகிஸ்தானின் தொடக்க வீராங்கனைகளை அவுட் செய்த அவர், ஆல்ரவுண்டர் வீராங்கனை நிடா தரை எல்.பி.டபுள்யு முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
Innings break: Sri Lanka post 260/7 at the end of 50 overs. Chamari Athapaththu 101, Harshitha Madhavi 75, Kavisha Dilhari 28, Nilakshi de Silva 24.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 5, 2022
Target 261.
LIVE: https://t.co/vH2xBN3T2X#PAKvSL #SLWomens pic.twitter.com/bijVbp5AFy
அலியா ரியாஸ்(56), ஒமைமா சொஹைல்(40) ஆகியோர் மட்டும் ஓரளவு ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீராங்கனை சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் 41.4 ஓவரில் 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் சமரி, ஒஷாடி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், இனோகா, கவிஷா மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Sri Lanka Women's ends the series on a high note! SL beat Pakistan by 93 runs in the 3rd ODI.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 5, 2022
PAKW 167 all out (41.4 ovs) vs SLW 260/7#PAKvSL #SLWomens pic.twitter.com/ouvOeYxikg