டெஸ்டில் 15வது சதத்தினை பதிவு செய்த இலங்கை கேப்டன்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தனது 15வது சதத்தினை அடித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்
இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியது.
இளம் வீரர் நிஷன் மதுஷ்கா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் குசால் மெண்டிஸ் கூட்டணி நங்கூர ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
15th Test century for Dimuth Karunaratne ?#SLvIRE | https://t.co/3KnXeQStWY pic.twitter.com/WXtjP6SPWa
— ICC (@ICC) April 16, 2023
திமுத் 15வது டெஸ்ட் சதம்
மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கருணரத்னே 140 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 15வது டெஸ்ட் சதம் ஆகும்.
மறுமுனையில் 18வது அரைசதத்தினை அடித்த குசால் மெண்டிஸ் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தக் கூட்டணி தற்போது வரை 180 ஓட்டங்கள் குவித்துள்ளது.
The unbeaten 181-run second-wicket stand has bolstered Sri Lanka.#SLvIRE | https://t.co/76KeRtXPOu pic.twitter.com/vW4C9yOaE3
— ICC (@ICC) April 16, 2023
85வது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணரத்னே 6344 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதம் மற்றும் 34 அரைசதம் அடங்கும்