தயாராகி இருக்கிறோம்! எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம்: இலங்கை கேப்டன் ஷனகா
ஆசியக் கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளதாக இலங்கை கேப்டன் ஷனகா நம்பிக்கை
துபாயில் நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
ஆசியக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தசுன் ஷனகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
Getty Images
இந்த நிலையில் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ள தசுன் ஷனகா அளித்த பேட்டியில், 'இரண்டு நாட்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம். எங்களுக்கு நல்ல அமர்வுகள் இருந்தன. அவை எங்களுக்கு உதவும்.
உங்களுக்கு தெரியும் கடந்த 2, 3 மாதங்களாக நாங்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இங்குள்ள நிலைமைகள் இலங்கையை ஒத்ததாக உள்ளன. நாங்கள் நன்கு தயாராகி உள்ளோம் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் எங்களது சிறந்த கிரிக்கெட்டை கொடுக்க தயாராக உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.