வலுவாக திரும்பி வருவோம்! இலங்கை அணி பயிற்சியாளர்
அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி வலுவாக திரும்பி வருவோம் - இலங்கை பயிற்சியாளர் சில்வர்வுட்
இலங்கை அணி அடுத்ததாக சிட்னியில் நடக்க உள்ள போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது
இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தங்கள் அணி வலுவாக திரும்பி வரும் என தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் பெர்த்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாயசத்தில் தோல்வியடைந்தது.
முன்னதாக அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலாக வீழ்த்திய இலங்கை பெர்த்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 29ஆம் திகதி சிட்னியில் நடக்க உள்ள போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறுகையில்,
'அவுஸ்திரேலியா விளையாட்டின் முக்கியமான விடயம் என்னவென்றால், நாங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகி, வலுவாகத் திரும்பி வருவதை உறுதிசெய்வதுதான்' என தெரிவித்துள்ளார்.
Getty Images