6 பந்துக்கு 6 சிக்ஸர்கள் பறக்க விட்ட இலங்கை அணி வீரர்! மிரண்டு போன எதிரணி... வைரலாகும் வீடியோ
இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணியும், ப்ளூமிங் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. 41 ஓவர்கள் போட்டியாக நடந்த அந்த போட்டியில் கடைசி 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பேட்டிங் ஆட வந்தார் திசாரா பெரேரா.
39வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த திசாரா பெரேரா, அடுத்ததாக அவர் எதிர்கொண்ட 40வது ஓவரின் 2 பந்தில் சிக்ஸர் விளாசியதுடன், அந்த ஓவரின் எஞ்சிய 4 பந்திலும் சிக்ஸர் விளாசினார்.
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி 13 பந்தில் 52 ரன்களை விளாசினார் திசாரா பெரேரா. இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் விளாசிய 9வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் திசாரா பெரேரா.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Thisara perera hit 6 sixes in one over ????? pic.twitter.com/3gWDFTDEoQ
— මදුරුවා ?? (@Maduruwaonline) March 29, 2021