அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்! பாகிஸ்தானை போட்டுத் தாக்கிய இலங்கை
காலே இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சினால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. துனித் 11 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த திக்வெல்ல 51 ஓட்டங்களில் இருந்தபோது நசீம் ஷா பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்கு தண்ணி காட்டிய ரமேஷ் மெண்டிஸ், 52 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார். கடைசி விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த அப்துல்லா ஷாபிக், இரண்டே பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காமல் அசித பெர்னாண்டோ பந்துவீச்சில் போல்டானார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் இலங்கை பந்துவீச்சில் தடுமாறினர். கேப்டன் பாபர் அசாம் 16 ஓட்டங்களிலும், இமாம் உல் ஹக் 32 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஸ்வான் மற்றும் ஃபாவத் ஆலம் இருவரும் 24 ஓட்டங்கள் எடுத்து ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
PC: Twitter (@TheRealPCB)
துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணியை, ஆல் ரவுண்டர் வீரர் அஃஹ சல்மான் மீட்டெடுத்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 126 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
PC: Twitter (@TheRealPCB)
முகமது நவாஸ் 12 ஓட்டங்களில் வெளியேற இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி இலங்கை அணியை விட 187 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
Stumps in Galle! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 25, 2022
Pakistan finish the day on 191/7 trail by 187.#SLvPAK pic.twitter.com/PeCaAIOwpn