இலங்கையின் பதிலடி! திக்குமுக்காடும் அவுஸ்திரேலிய அணி: காலே டெஸ்டில் ஆதிக்கம்
காலேவில் நடந்து வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 364 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது இன்னிங்சை தொடங்கியது.
பதும் நிசங்கா 6 ஓட்டங்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கேப்டன் கருணரத்னேவுடன் கைகோர்த்த குசால் மெண்டிஸ் நங்கூர ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
அபாரமாக ஆடிய திமுத் கருணரத்னே 86 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்வெப்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிசும் 85 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தனது பங்கிற்கு 52 ஓட்டங்கள் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய தினேஷ் சண்டிமல் அரைசதம் கடந்தார். அவருடன் அறிமுக போட்டியில் களமிங்கிய கமிந்து மெண்டிசும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
PC: Getty Images
தற்போது வரை இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்கள் குவித்துள்ளது. சண்டிமல் 82 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 43 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.