4வது டி20 போட்டியிலும் தோல்வி... இலங்கையை ஊதி தள்ளி மீண்டும் வெற்றி வாகை சூடியது உலக சாம்பியன்
மெல்போர்னில் நடந்த 4வது டி20 போட்டியிலும் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலிய வெற்றி வாகை சூடியது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 3 போட்டியிலும் தோல்வியடைந்த தொடரை இழந்த இலங்கை அணி, 4வது டி20 போட்டியில் ஆறுதல் வெற்றிப்பெற்று ஒயிட் வாஷை தவிர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மெல்போர்னில் தொடங்கிய 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி முதலி பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் கேன் ரிச்சர்ட்சன், Jhye ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 18.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.
Australia by six wickets!
— cricket.com.au (@cricketcomau) February 18, 2022
They go four-nil up in the the series #AUSvSL
அதிகபட்சமாக மேக்ஸ்வெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 எடுத்தார். இலங்கை தரப்பில் பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-0 என அவுஸ்திரேலிய கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆவதை தவிர்க்க கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.