பிரதமர் அலுவலகத்தை மீட்க களமிறங்கிய இலங்கை ராணுவம்: எதிர்த்து நிற்கும் போராட்டக்காரர்கள்
இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கும் முயற்சியில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது என கோட்ட கோ கம செயற்பாட்டாளர் கஸ்ஸப தேரர் (Kassapa Thero) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்களுக்கு தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு அந்த நாட்டு அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டத்தை தொடர்ந்து, இலங்கை மக்கள் பெரும்பாலானோர் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் குதிக்க தொடங்கினர்.
இந்த போராட்டம் ஜூலை 9ம் திகதி தீவிரமாக வெடித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இல்லம் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் அதிரடியாக கைப்பற்றினர்.
Breaking News
— DailyMirror (@Dailymirror_SL) July 13, 2022
Military attempted to regain control of the Prime Minister’s Office a few minutes ago but the protesters managed to get back in: GGG activist Venerable Kassapa Thero pic.twitter.com/Q13uLlrX2m
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களில் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், போராட்டக்காரர்கள் இலங்கை பிரதமரின் இல்லத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முயற்சியிலும், போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ராஜினாமா கடிதத்தை சமர்பிக்காத கோட்டபய ராஜபக்ச: சிங்கப்பூர் செல்ல திட்டம்!
இந்தநிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டை இராணுவம் மீண்டும் பெற முயற்சித்த போதிலும் போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகத்தில் நீடிக்க முடிந்தது என கோட்ட கோ கம செயற்பாட்டாளர் கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.