கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28ம் திகதி காலமானார், இதனை தொடர்ந்து அவரது பூத உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்ற இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேட்டி
இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், தலைவர் என்ற சொல்லுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு கேப்டன் விஜயகாந்த்.
யார் கஷ்டம் என வந்தாலும் உதவிகளை வாரி வழங்க கூடியவர். தேமுதிக தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண யாரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த முறை தமிழ்நாட்டிற்கு வந்து இருந்த போது முதல்வரை சந்தித்து மீனவர்கள் பிரச்சனையை எடுத்துரைத்தேன், அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |