டெஸ்ட் கோப்பையை அறிமுகம் செய்த இலங்கை கேப்டன்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான கோப்பையை இரு அணிகளின் கேப்டன்களும் அறிமுகம் செய்தனர்.
டெஸ்ட் தொடர்
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் நாளை காலே மைதானத்தில் தொடங்குகிறது. சூலை 24ஆம் திகதி கொழும்பில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குகிறது.
திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி களமிறங்குகிறது. அதேபோல் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
கோப்பை அறிமுகம்
இந்நிலையில் இரு அணி கேப்டன்களான திமுத் கருணரத்னே மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து டெஸ்ட் கோப்பையை அறிமுகம் செய்தனர்.
இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், 'நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன, இன்று இரண்டு கேப்டன்கள் மதிப்புமிக்க டெஸ்ட் தொடர் கோப்பையை வெளியிட்டனர்!' என குறிப்பிட்டுள்ளது.
?? Sri Lanka and ?? Pakistan are set to battle it out in the first Test match starting tomorrow, and today, two captains unveiled the prestigious Test series Trophy! ??#SLvPAK pic.twitter.com/rPdCQMV9iR
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 15, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |