மகிந்த ராஜினாமாவை பட்டாசு வெடித்து கொண்டாடிய இலங்கை மக்கள்! வெளியான வீடியோ
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கையில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பிரதருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காலி முகத்திடலுக்கு சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாட்டம்#lka #SriLanka pic.twitter.com/oY17Q5FtRW
— Vithushan Jeyachandran (@imjvithu) May 9, 2022
இதனையடுத்து, மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கையில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், கொழும்பில் இன்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்