லவ் யூ இலங்கை! கிரிக்கெட் வீரர் பகிர்ந்த வீடியோ
இலங்கை ரசிகர்கள் வெற்றியை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்த பனுக ராஜபக்சா
பனுக ராஜபக்சா 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்
இலங்கை அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவை பனுக ராஜபக்சா பகிர்ந்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இலங்கை அணியில் பனுக ராஜபக்சா, குணதிலகா, குசால் மெண்டீஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். இவர்களது துடுப்பாட்டத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
Love you Sri Lanka ??❤ https://t.co/LuBm686MV7
— Bhanuka Rajapaksa (@BhanukaRajapak3) September 4, 2022
மேலும் இலங்கை அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் இலங்கை வீரர் பனுக ராஜபக்சா ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் லவ் யூ இலங்கை என குறிப்பிட்டுள்ளார்.
PC: AP Image