உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கை வீரரின் ஆதிக்கம்! 20 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டல்
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் போட்டிகளில் இதுவரை 20 விக்கெட்டுகளை கைப்பற்றி, இலங்கை ஆல்ரவுண்டர் வணிந்து ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை அணி தகுதி
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்பேயில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸில் மிரட்டி வரும் இலங்கை அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டது.
ஆனால் முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் ஒரு வெற்றி கூட (சூப்பர் சிக்ஸ்) பெறாததால் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
Getty Images
ஹசரங்கா முதலிடம்
ஜிம்பாப்பே, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தி வருகின்றன. இந்த சுற்றுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில், இலங்கையின் ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார்.
AFP
20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஹசரங்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி மற்றொரு இலங்கை வீரர் தீக்ஷணா உள்ளார்.
ICC
தகுதிச்சுற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
- வணிந்து ஹசரங்கா - 20 விக்கெட்டுகள்
- மஹீஷ் தீக்ஷணா - 13 விக்கெட்டுகள்
- ரிச்சர்ட் ங்கரவா - 13 விக்கெட்டுகள்
- பிலால் கான் - 13 விக்கெட்டுகள்
- கிறிஸ் கிரேவ்ஸ் - 12 விக்கெட்டுகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |