கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்விட்ட ராப் பாடகரின் இறுதி நிமிடங்கள்! வைரலாகும் காணொளி
இலங்கையில் கோட்டாபய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர் மரணமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிக்கு எதிராக மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அதிபர கோட்டாபய பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு Gall Face Green-ல் நடந்து GO HOME GOTA பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ராப் பாடகர் Shiraz, பாப் மார்லியின் ‘Get up, stand up’ பாடலை பாடி போராட்டகாரர்களை உற்சாகப்படுத்தினார்.
பாடலை பாடி முடிந்த சில நிமிடங்களில் போராட்ட களத்திலே அவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஆம்புலன்சில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ராப்பர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆடையை களைந்து பெண்களை சித்திரவதைக்கும் ரஷ்ய துருப்புகள்! துணை பிரதமர் வேதனை
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக Shiraz காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Shiraz Shiraz ගේ අවසන් ගායනය
— Shehan Madawa ?? (@shehanmlive) April 12, 2022
Get up, stand up
Stand up for your right
නිවන්සුව ලැබේවා… ❤️ ? pic.twitter.com/FB4Zib5JDR
Shiraz மறைவைத் தொர்ந்து Gall Face Green-ல் நடந்த போராட்டத்தில் மயங்கி விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் அரவரமாக பாடிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.