இலங்கை அணி 500 ஓட்டங்கள் குவிப்பு! முதல் அரைசதம் விளாசிய இளம்வீரர்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 500 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முதல் நாளில் 386 ஓட்டங்கள்
காலேவில் நடந்து வரும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி துடுப்பாடி வருகிறது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி 386 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியுள்ளது. தினேஷ் சண்டிமல் 18 ஓட்டங்களுடனும், பிரபத் ஜெயசூர்யா 12 ஓட்டங்களுடனும் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
Dinesh Chandimal brings up his fifty! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 17, 2023
Match Centre: https://t.co/h1a5jr3DFe#SLvIRE #LionsRoar pic.twitter.com/VLNlVxghdx
பிரபத் ஜெயசூர்யா மேலும் 4 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கேம்பர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 13 ஓட்டங்களில் வெளியேறினார்.
இலங்கை வீரர் முதல் அரைசதம்
அதன் பின்னர் இளம் வீரர் சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். தினேஷ் சண்டிமலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
Sadeera Samarawickrama brings up his maiden test half century! ?? Will he go all the way to ??#SLvIRE #LionsRoar pic.twitter.com/LcXmLHpfu6
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 17, 2023
இதற்கிடையில் தினேஷ் சண்டிமல் 26வது டெஸ்ட் அரைசதத்தினை அடித்தார். தற்போது வரை இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தினேஷ் சண்டிமல் 66 ஓட்டங்களுடனும், வீரர் சதீர சமரவிக்ரமா 52 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
At Day 2 Lunch, Sr Lanka move on past 500! Chandimal and Sadeera have added an unbeaten 95 runs for the 7th wicket. ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 17, 2023
Match Centre: https://t.co/h1a5jr3DFe#SLvIRE #LionsRoar pic.twitter.com/qFYdi3jjd1