அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த இலங்கை!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பல்லேகேலேவில் இன்று இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் குணாதிலகா-நிசங்கா, அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இலங்கை அணி 20வது ஓவரில் 115 ஓட்டங்கள் சேர்த்தது.
Pathum Nissanka brings up his 3rd ODI fifty! #SLvAUS #CheerForLions pic.twitter.com/cbWVP0cJCD
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 14, 2022
அந்த ஓவரின் 4வது பந்தில் குணாதிலகா 55 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் நிசங்காவும் 56 ஓட்டங்களில் அகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ், அவுஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
Fifty up for Danushka Gunathilaka! That's his 11th in ODIs.?#SLvAUS #CheerForLions pic.twitter.com/rOV5CSGX7A
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 14, 2022
? LIVE: https://t.co/ClT8LTHBsY
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 14, 2022
? Match Centre: https://t.co/PM2MbqP3ar #SLvAUS pic.twitter.com/tavsWCXvyZ
அவருக்கு பக்க பலமாக விளையாடிய அசலங்கா 37 ஓட்டங்கள் எடுத்து, ஜேய் ரிச்சர்டுசன் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த ஹசரங்கா 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசினார்.
Mendis powers Sri Lanka to 300!?#SLvAUS #CheerForLions pic.twitter.com/vo4V6GMzjO
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 14, 2022
இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற குசால் மெண்டிஸ் 87 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
அவுஸ்திரேலியா அணி தரப்பில் மார்னஸ் லபுக்ஷேன், அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் மற்றும் ரிச்சர்டுசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.