உலகக்கோப்பையில் இமாலய வெற்றி பெற்ற இலங்கை! துவம்சம் செய்த குசால் மெண்டிஸ்
குசால் மெண்டிஸ் - அசலங்கா கூட்டணி 70 ஓட்டங்கள் எடுத்தது
அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இலங்கை - அயர்லாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களே எடுத்தது.
அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 45 ஓட்டங்களும், ஸ்டிர்லிங் 34 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கையின் தீக்ஷணா, ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sri Lanka restrict Ireland to 128/8 with Wanindu Hasaranga and Maheesh Theekshana taking two wickets each.#SLvIRE #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/TXMqEUEq5O
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 23, 2022
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தனஞ்செய டி சில்வா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும், ருத்ர தாண்டவம் ஆடிய குசால் மெண்டிஸ் 43 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
Back-to-back fifties for Kusal Mendis ?#RoaringForGlory #SLvIRE pic.twitter.com/7asEb8ikNQ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 23, 2022
அவருக்கு உறுதுணையாக துடுப்பாட்டம் செய்த அசலங்கா 22 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார். இவர்களின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
Ireland ✅
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 23, 2022
What a commanding win by Sri Lanka! ?
Kusal Mendis led the chase with an unbeaten 68.#SLvIRE #RoaringForGlory #t20worldcup pic.twitter.com/5mkEDkcLuy