தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான 22 வீரர்கள் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
செப்டம்பர் 2ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி, செப்டம்பர் 4ம் தேதி 2வது ஒரு நாள் போட்டி மற்றும் செப்டம்பர் 7ம் தேதி 3வது ஒரு நாள் போட்டி என 3 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 10, 12, 14ம் தேதிகளில் 3 டி-20 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான 22 வீரர்கள் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
The following 22 member squad was selected by the Cricket Selection Committee to take part in the ODI and T20I series against South Africa - https://t.co/vZBcpz9MNg
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 30, 2021
??vs??#SLvSA pic.twitter.com/LSXgqG1ErX
தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் லஹிரு மதுசங்க ஒருநாள் மற்றும் டி-20 அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
ஒருநாள் மற்றும் டி-20 அணியில் புலினா தரங்கா மற்றும் மகீஷ் தீக்ஷனா சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விபரம்;
- தாசுன் ஷனகா - கேப்டன்
- தனஞ்சய டி சில்வா - துணை கேப்டன்
- குசல் ஜனித் பெரேரா
- தினேஷ் சந்திமால்
- அவிஷ்கா பெர்னாண்டோ
- பானுக ராஜபக்ஷ
- பாத்தும் நிசங்க
- சரித் அசலங்கா
- வனிந்து ஹசரங்கா
- கமிந்து மெண்டிஸ்
- மினோத் பானுகா
- ரமேஷ் மெண்டிஸ்
- சாமிகா கருணாரத்ன
- நுவான் பிரதீப்
- பினுரா பெர்னாண்டோ
- துஷ்மந்த சமீரா
- அகிலா தனஞ்செயா
- பிரவீன் ஜெயவிக்ரம
- லஹிரு குமார
- லஹிரு மதுஷங்க
- புலின தரங்கா
- மகீஷ் தீக்ஷனா