ஆப்கானின் வேகத்தை முடக்கிய இலங்கை! மிரட்டிய பந்துவீச்சாளர்கள்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 228 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
குர்பாஸ் மிரட்டல் ஆட்டம்
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகெல்லேவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முந்தைய போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் இப்ராகிம் ஜட்ரானை 10 ஓட்டங்களில் லஹிரு குமரா வெளியேற்றினார்.
@GettyImages
ஆனால், குர்பாஸ் மற்றும் ரஹ்மத் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி 113 ஓட்டங்கள் சேர்த்தது. அரைசதம் விளாசிய குர்பாஸ் 68 ஓட்டங்களில் தனஞ்செய் டி சில்வா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
@AFP/Getty Images
அவரைத் தொடர்ந்து தீக்ஷ்ணா பந்துவீச்சில் ரஹ்மத் (58) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நஜிபுல்லா, குல்புதின் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர். கேப்டன் ஷாஹிடி 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் லக்ஷனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இலங்கை அபார பந்துவீச்சு
முகமது நபி மட்டும் ஒருபுறம் தாக்குப்பிடிக்க, ரஜிதா ஓவரில் ஆப்கான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நபி 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே அகமதுஸாய் வெளியேறினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவரில் 228 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 15 ஓவர்களில் இலங்கை அணியின் மிரட்டல் பந்துவீச்சினால் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை தரப்பில் ரஜிதா 3 விக்கெட்டுகளையும், தீக்ஷணா மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.