இலங்கை-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: மைதானத்திற்கு உடும்பு புகுந்ததால் பரபரப்பு
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
இலங்கை ஆப்கானிஸ்தான் மோதல்
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்கள் முடிவிலேயே 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விஷ்வா பெர்னாண்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டமான இன்று, 47.3வது ஓவரின் போது 216 ஓட்டங்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணியை விட 18 ஓட்டங்கள் இலங்கை முன்னிலையில் இருந்தது.
அப்போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது, இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
We had an uninvited guest on the field today ??#SonySportsNetwork #SLvAFG pic.twitter.com/1LvDkLmXij
— Sony Sports Network (@SonySportsNetwk) February 3, 2024
நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.
தற்போது இலங்கை அணி 101.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 410 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் இலங்கை அணி சார்பில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
monster lizard enters into Srilanka vs Afghanistan test match cricket ground, Sri Lanka cricket team, Afghanistan cricket team, Angelo Mathews, Dinesh Chandimal.