இலங்கை விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது: ரூ.354,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பயணி கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

19ம் திகதியான இன்று அதிகாலை 12.45 மணிக்கு துபாயிலிருந்து ஃப்ளை துபாய் FZ-569 விமானம் மூலம் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய அந்த பெண் விமான நிலையத்தின் கீரின் சேனல் வழியாக வெளியேற முயற்சித்த போது சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள்
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து சுமார் 354,000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் 49 வயதுடைய பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கூடுதல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |