இறுதிவரை பட்டையை கிளப்பிய குசால்... உலக சாம்பியனை வீழ்த்தி ஒயிட் வாஷை தவிர்த்தது இலங்கை!
மெல்போர்னில் நடந்த கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் உலக சாம்பியனான அவுஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது இலங்கை.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இழந்து ஒயிட் வாஷை தவிர்த்தது இலங்கை.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடியது.
முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவி டி20 தொடரை இழந்த இலங்கை அணிக்கு, கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று ஒயிட் வாஷை தவிர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மெல்போர்னில் நடந்த 5வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் அதிகட்சமாக மேத்யூ வேட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பந்து வீச்சில் சமிரா, லஹிரு குமார தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி, 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி ஆறுதல் வெற்றிப்பெற்றது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
Kusal Perera's nice innings has earned him Player of the Match honours #AUSvSL pic.twitter.com/knS7EYKElb
— cricket.com.au (@cricketcomau) February 20, 2022
அவுஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இழந்து ஒயிட் வாஷை தவிர்த்தது இலங்கை.
ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் குசால் மெண்டிஸிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலுக்கு வழங்கப்பட்டது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியினர், கோப்பையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Winners are grinners!
— ?Flashscore Cricket Commentators (@FlashCric) February 20, 2022
LIVE COMMS:
? https://t.co/0EkwGDwNNK?#AUSvSL|#SLvAUS pic.twitter.com/OkkjsGknv4