டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மேலும் 5 வீரர்கள் சேர்ப்பு! வெளியான முக்கிய தகவல்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மேலும் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என SLC அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், இங்கிலாந்து, நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினி, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில், 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணியில் மேலும் 5 வீரர்களை கூடுதலாக இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவில் சேர்த்துள்ளது.
- பாத்தும் நிசங்க
- மினோத் பானுகா
- அஷேன் பண்டார
- லக்ஷன் சண்டகன்
- ரமேஷ் மெண்டிஸ்
இதற்கிடையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த லஹிரு மதுஷங்கா, காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால் அவர் அணியுடன் பயணிக்க மாட்டார் என SLC அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மொத்தம் 23 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 2021 அக்டோபர் 3 ஆம் தேதி இலங்கை அணி ஓமானுக்கு புறப்படும் என SLC அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.