2 ஆம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த விவகாரம்! ஆசிரியை கொடுத்த விளக்கம்
இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் 2 ஆம் வகுப்பு மாணவனை சக வகுப்பு மாணவர்களை விட்டு அடிக்க சொல்லியதற்கு ஆசிரியை விளக்கம் கொடுத்துள்ளார்.
மாணவரை கன்னத்தில் அறையும் சக மாணவர்கள்
உத்தரப் பிரதேச மாநிலம், முஸாபர்நகரில் த்ரபதி தியாகி என்ற பள்ளி ஆசிரியை ஒருவர் 2 ஆம் வகுப்பு மாணவனை வாய்ப்பாடு படிக்கும்படி கூறுகிறார். அதற்கு, அந்த மாணவன் சரியாக கூறவில்லை.
உடனே, அந்த ஆசிரியர் சக மாணவரை அழைத்து அந்த மாணவரின் கன்னத்தில் அறையும்படி கூறுகிறார். அப்போது, அந்த மாணவன் தன்னை கன்னத்தில் அறையும் போது அழ ஆரம்பிக்கிறார்.
இதற்கு அந்த ஆசிரியர், ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்லி, இந்த மதத்தில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால் தான் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
ஆசிரியை கொடுத்த விளக்கம்
இந்த சம்பவம் குறித்து ஆசிரியை த்ரபதி தியாகி கூறும்போது," நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் எழுந்து செல்ல முடியாது. அதனால், சரியாக பாடம் படிக்காத மாணவனை சக மாணவர்களை விட்டு தண்டித்தேன். இதனை வீடியோ எடுத்து திரித்து என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்றார்.
அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |