இங்கிலாந்தில் விதிகளை மீறி சுற்றி திரிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நேர்ந்த கதி! SLC அதிரடி நடவடிக்கை
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்கெல்ல ஆகியோரை இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எல்.சி தலைவர் Shammi Silva தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
SLC has decided to bring back cricketers Kusal Mendis and Niroshan Dickwella for breaching the bio-bubble.
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) June 28, 2021
Video Credit - Nazzer Nisthar #ENGvSL pic.twitter.com/kfGrLC9MQv
அடுத்த விமானத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவோம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என Shammi Silva கூறினார்.